39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

அமீரகம் முழுவதும் அமைக்கப்படவிருக்கும் விரைவு கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள்.! பரிசோதனை செய்ய 5 நிமிடம் தான்..

Sheikh Mohamed

அமீரகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுப்பதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக மொபைல் டெஸ்ட் சென்டர் (Mobile Test Center) சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து நேற்று பதிவிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக அபுதாபியின் பட்டத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி கொரோனா வைரஸ் பரிசோதனையை விரிவுபடுத்தவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ளவும் நாடு முழுவதும் பல இடங்களில் மொபைல் டெஸ்ட் சென்டர்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை மையங்கள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பரிசோதனை மையத்தைப் போலவே செயல்படும். அதுமட்டுமில்லாமல் துபாய், ஷார்ஜா(அஜ்மான் மற்றும் உம் அல் குவைனுக்கும் சேவை செய்யப்படும்), ராஸ் அல் கைமா, புஜைரா, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகிய இடங்களில் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனை மையங்கள், அமீரக மக்களுக்காக அடுத்த 10 நாட்களில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள முதல் பரிசோதனை மையத்தை சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் அபுதாபி சுகாதார சேவை நிறுவனம்-SEHA மற்றும் அபுதாபி சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாகவும், உலகளவில் ஐந்தாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!