கொரோனா வைரஸ்: அமீரகத்தில் புதிதாக 85 வழக்குகள்.!

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொடூர கொரோனாவினால் பாதிப்புக்குள்ளான 85 புதிய வழக்குகளை அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி வெளியிட்டுள்ளார். இதனால் நாட்டில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 333 ஐ எட்டியுள்ளது.

இதில் 7 நபர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதன் மூலம் அமீரகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

Source: Gulf News

Loading...