35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் கொரோனா குறித்த மனநல உதவிக்கு அவசர அழைப்பு எண் அறிவிப்பு!

whatsapp

அபுதாபி: கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா குறித்த மன நல உதவிக்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்கான அமீரக தேசிய திட்டம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த மென்டல் சப்போர்ட் லைன் (Mental Support Line) என்னும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் அரபியில் வழங்கப்படும் இந்த சேவையை வாட்சாப் மூலமாகவோ போனில் அழைப்பதன் வாயிலாகவோ பெறலாம்.

இச்சேவையைப் பெற விரும்புபவர்கள் 800-4673 (HOPE) என்ற எண்ணினை அழைக்கலாம்.

தற்போது நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணிவரை வழங்கப்படும் இச்சேவை ரமலானுக்குப் பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு hope.hw.gov.ae என்ற இணையதள முகவரியை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சில பதிவுகள்