UAE Tamil Web

கோவிட்-19: அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யானுக்கு செலுத்தப்பட்டது சீன நிறுவன தடுப்பூசி..

vaccine

அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான்(Sheikh Nahyan Bin Mubarak Al Nahyan) கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டுள்ள அமைச்சர் ஷேக் நஹ்யான் கூறுகையில், சிறந்த அறிவியல் மற்றும் நடைமுறை தரங்களின் அடிப்படையிலும், புத்திசாலித்தனமான தலைமையின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுடன் கோவிட் -19-ன் விளைவுகளை அதிக செயல்திறனுடன் கையாளும் திறனை அமீரகம் நிரூபித்துள்ளது என்று கூறினார்.

தற்போது அமீரகத்தில் தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் முன்னணி களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசியை சீனவை சேர்ந்த மருந்து நிறுவனமான சினோபார்ம் சீனா தேசிய பயோடெக் குழுமம் உருவாக்கியுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனைகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன.

தன்னார்வலர்களுக்கு பெரிய பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. அமீரகத்தில் கோவிட் -19 தடுப்பூசி பெற்ற 125 நாடுகளை சேர்ந்த சுமார் 31,000 தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று நிரூபனமானது. இதனை அடுத்து கொரோனா தொற்றால் ஆபத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசியை செலுத்த செப்டம்பர் மாதம் அவசரகால அனுமதி வழங்கியது அமீரகம்.

கோவிட் -19 தடுப்பூசியின் பயன்பாடு உயிர்களைக் காப்பாற்ற பங்களிக்கிறது, மேலும் இது தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.