UAE Tamil Web

தற்போதைய சூழலில் இதற்கு தான் நாங்கள் அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருகிறோம்.! அமீரக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்

uae

கோவிட் -19 தொற்றிலிருந்து மக்களை காக்க பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்கி, அதை மேம்படுத்தி சமூக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கே தற்போது முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அமீரகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

வழக்கமான நடைபெறும் கோவிட் -19 ஊடக சந்திப்பின் போது, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஒமர் அல் ஹம்மாடி இது தொடர்பாக பேசினார். முன்கள தொழிலாளர்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரச்சாரம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

எனினும் தற்போது தடுப்பூசி எங்கள் முன்கள தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை வழங்கப்படாது என்றார்.

முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை பராமரிப்பதும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் மிக முக்கியமானவை. ஆனால் தடுப்பூசி என்பது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நமது ஆயுதமாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பூசி பயன்பாட்டுடன் இணையும் போது தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி உறுதியாகும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் வரும் நாட்களில் படிப்படியாக வைரஸ் பரவலை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு செய்யப்பட வேண்டும். இதன் பொருள் நோய் தோன்றும் போதெல்லாம், அதை எதிர்கொள்ள ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு தயாராக இருப்பது என்பதாகும்.

நாடு தனது 49-வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று நினைவூட்டினார். தொற்றுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தேசிய தின கொண்டாட்டங்களின் மூலம் விதி மீறல்கள் மற்றும் நோய் தடுப்பு குறைபாடுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அனைத்து குடிமக்களும், குடியிருப்பாளர்களும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க கேட்டு கொள்வதாக அல் ஹம்மாடி கூறினார்.