29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

கொரோனா வைரஸ்: அமீரக மத தளங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

large gatherings at religious place

பிரார்த்தனை கூடங்களின் நுழைவாயிலில் வெப்பநிலை ஸ்கேனர்களை நிறுவுவது முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல வழிபாட்டுத் தலங்கள் கொரோனா வைரஸ்சிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள கிராண்ட் மசூதியின் முற்றமும் தளங்களும் தினமும் நான்கு முறை கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பிற மத தளங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கிஸ் ஆப் பீஸ் (Kiss of Peace) எனப்படும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில், பக்தர்கள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக்கொள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க சடங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக செயின்ட் தாமஸ் ஆர்த்தடாக்ஸ் கதீட்ரலில் உள்ள ஃபாதர் நினன் பிலிப் பனக்கமட்டம் விகார் தெரிவித்துள்ளார்.

“இது எங்கள் பிரார்த்தனைகளில் ஒரு பெரிய பகுதியாகும். தற்போது இந்த சடங்கை மாற்ற பெருநகரத்திலிருந்து எங்களுக்கு சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது. இனி கைகுலுக்கு பதிலாக மக்கள் ஒருவருக்கொருவர் குனிந்து வணங்குவதன் மூலம் பிரார்த்தனைக் கூட்டங்களில் சரியான சுகாதாரத்தை உறுதி செய்ய முடியும்” என்று ஃபாதர் நினன் விளக்கினார்.

அதேபோல், துபாயில் உள்ள செயின்ட் மேரி கத்தோலிக்க தேவாலயம் உடல் ரீதியான தொடர்பைக் குறைக்க வேண்டும் என்பதால் “புனித ஒற்றுமை இனி நாக்கில் கொடுக்கப்படாது. அதற்கு பதிலாக, தேவாலய ஊழியர்கள் அதை கையால் எடுக்க வேண்டும்” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (March 01 2020) அறிவித்தது.

கூட்டங்களைத் தவிர்ப்பது

கொரோனா வைரஸ் குறித்த அதன் சமீபத்திய ஆலோசனைகளில் ஒன்றில், உலக சுகாதார அமைப்பு (WHO) “மெருமளவு மக்கள் கூட்டங்கள் ஒன்று சேர்வதில் தான், வைரஸ் தொற்றின் பரவலை அதிகரிக்கச் செய்வதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட சுவாச நோய்த்தொற்றுகள் பரவுவது மக்கள் கூட்டங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பதால் தான்” என்று எச்சரித்துள்ளது.

உண்மையில், சீனாவுக்கு அடுத்து அதிகமாக இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட தென் கொரியாவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் கணிசமான சதவீதம் தேவாலய சபையுடன் சம்பந்தப்பட்டுள்ளது தான்.

இதையடுத்து அதன் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, செயின்ட் தாமஸ் ஆர்த்தடாக்ஸ் கதீட்ரல் மிகப்பெரிய கூட்டங்களைக் குறைப்பதற்கான வழிகளையும் வகுத்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கதீட்ரலில் சராசரியாக 1,000 பேர் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். “இதுபோன்ற பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக, நாங்கள் இப்போது ஒரு பிரசங்கத்திற்கு பதிலாக மூன்று பிரசங்கங்களை ஏற்பாடு செய்ய உள்ளோம். காலையில் இரண்டு, மாலை ஒன்று என இருக்கும். இது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்” என்று ஃபாதர் நினன் கூறினார்.

“காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தேவாலயத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு நாங்கள் கோரியுள்ளோம். நுழைவாயில்களிலும் கை சுத்திகரிப்பு மருந்துகள் நிறுவப்பட்டுள்ளன” என்று விகார் மேலும் கூறினார்.

இளைஞர்களுக்கான ஞாயிற்றுக்கிழமை பைபிள் பாட வகுப்புகளும் ஒரு மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குருத்வாராவில் ஸ்கேனர்கள்

இன்று குருத்வாரா நுழைவாயில்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் வெப்பநிலை ஸ்கேனர்கள் நிறுவப்படும் என்று ஜெபல் அலி குருநானக் தர்பாரின் தலைவர் சுரேந்தர் சிங் காந்தாரி அமீரக ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிக உடல்வெப்பநிலை இருக்கும் மக்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக குருத்வாராவைப் பார்க்க வேண்டாம் என்று கோரப்படுவார்கள்.

வழிபாட்டுத் தலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 பேர் கலந்துகொள்கிறார்கள், வார இறுதி நாட்களில் 15,000 பேர் வருகை தருகிறார்கள்.

“அதில் அனைத்து தரப்பு மக்களும் எங்களிடம் வருகிறார்கள். நாங்கள் கை சுத்திகரிப்பாளர்களை நிறுவியுள்ளோம். பின்னர் சமையலறை, தளங்கள், கழிப்பறைகள் மற்றும் தரைவிரிப்புகள் ஆகியவற்றின் துப்புரவு சேவைகள் இப்போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் செய்யப்படும். இதை தவிர்த்து நாங்கள் ஒரு ISO சான்றளிக்கப்பட்ட குழுவாகும். அதாவது ஏதேனும் நோய் வந்தாலும் வராவிட்டாலும் சரி, ஒவ்வொரு நாளும் நாங்கள் சுத்தம் செய்வது எங்களது கடமை ஆகும்” என்றார் காந்தாரி.

இந்து கோவில்

சிந்தி குரு தர்பார் இந்து கோவிலின் அறங்காவலர் ராஜு ஷிராஃப், சிந்தி சடங்கு நிகழ்வுகள் மையத்தில் நடைபெறும் அனைத்து மக்கள் கூட்டங்களும் தடைசெய்யப்படும் என்றார்.

“நாங்கள் பெரிய உள்ளிருப்பு நிகழ்வுகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் பிரசங்கங்களை ஏற்பாடு செய்வதிலிருந்து மக்களை எச்சரிக்கைப்படுத்தியுள்ளோம். மேலும் கோயிலில், நாங்கள் கை துப்புரவுப் பொருள்களை நிறுவியுள்ளோம். கோவில் ஊழியர்கள் தொடர்ந்து முக்கிய இடங்களை (Major Touchpoints) சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று ஷிராஃப் கூறினார்.error: Alert: Content is protected !!