UAE Tamil Web

வெளிநாட்டிலிருந்து அபுதாபி வருவோருக்கான புதிய பயண விதிமுறைகளை வெளியிட்டது அரசு..!

Stock-Dubai-airport-passengers_

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி திரும்பும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான புதிய பயண விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Alhosn அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஒன்பதாவது நாள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜூலை 31 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த அபுதாபி அரசினால் வெளியிடப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Stock-Dubai-airport-passengers_
15 Shares
Share via
Copy link