UAE Tamil Web

இந்த நாடுகளில் இருந்து அபுதாபி வருபவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை – புதுப்பிக்கப்பட்ட “கிரீன் லிஸ்ட்” வெளியீடு..!

abudhabi_airport1_

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  1. ஆஸ்திரேலியா
  2. பூட்டான்
  3. புருனே
  4. சீனா
  5. கியூபா
  6. கிரீன்லாந்து
  7. ஹாங்காங் (SAR)
  8. ஐஸ்லாந்து
  9. இஸ்ரேல்
  10. ஜப்பான்
  11. மொரீஷியஸ்
  12. மொராக்கோ
  13. நியூசிலாந்து
  14. போர்ச்சுகல்
  15. ரஷ்யா
  16. சவூதி அரேபியா
  17. சிங்கப்பூர்
  18. தென் கொரியா
  19. சுவிட்சர்லாந்து
  20. தைவான் (ROC)
  21. தஜிகிஸ்தான்
  22. ஐக்கிய இராஜ்ஜியம்
  23. உஸ்பெகிஸ்தான்
abudhabi_airport1_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap