UAE Tamil Web

வெளிநாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு கண்காணிப்பு கைப்பட்டை (wristbands) இனி தேவையில்லை..!

home-quarantine

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வருவோருக்கு விமான நிலையத்திலேயே கண்காணிப்பு கைப்பட்டை வழங்கும் நடைமுறை கடந்த பல மாதங்களாக நடைமுறையில் இருந்துவந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வரும் நெகட்டிவ் கொரோனா PCR சான்றிதழ் வைத்திருப்போர் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்போது கைப்பட்டை அணிவதிலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா பாசிட்டிவ் ஆன பயணிகளுக்கு கைப்பட்டை அவசியம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குடிமக்கள், பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை எவ்வித அலட்சியமுமின்றி கடைபிடிக்கவேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

home-quarantine
1 Share
Share via
Copy link