புத்தாண்டு பிறக்கும் மாலையில் நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது அபுதாபி அரசு. அபுதாபியில் உள்ள ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இடத்தின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை. அவற்றைக் கீழே காணலாம்.
- கிரீன் பாஸ் விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.
- EDE ஸ்கேன் மற்றும் வெப்பப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அனைவரும் முகக்கவசம் அணிதலை உறுதிப்படுத்தவேண்டும்.
- 60 சதவீதத்திற்கும் அதிகமாக மக்களை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது.
- 1.5 மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் வேண்டும்.
- வருகை/ வெளியேறுதல் நடவடிக்கைகளை தெளிவுபடுத்தவேண்டும்.
- சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
- இடங்கள் உடனடியாக சுத்திகரிப்பு செய்யப்படவேண்டும்.
- விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கவேண்டும்.
- சமூக இடைவெளி இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றாக அமர அனுமதிக்கலாம்.
Circular| All hotel and tourism establishments, event organisers, venue owners, and cultural and leisure venues are requested to comply with the protocol of New Year’s Eve events.
To learn more, visit: https://t.co/thHpph96cb #InAbuDhabi pic.twitter.com/Wll3RdAbe0
— Department of Culture and Tourism – Abu Dhabi (@dctabudhabi) December 29, 2021
விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை எச்சரித்துள்ளது.
