UAE Tamil Web

அதிகரிக்கும் கொரோனா: 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதி..!

office

அபுதாபி அரசு ஊடக அலுவலகம் இன்று (சனிக்கிழமை) சமூகவலைதளங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், அபுதாபியின் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் (semi govt) 30 சதவீத ஊழியர்கள் என்ற அளவில் வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

அதனை தொடர்ந்து 70 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும், தடுப்பூசி போடாத ஊழியர்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனாவிற்கான PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய அலுவலக பணிகளை வீட்டிலிருந்தே செய்ய அறிவுறுத்தப்படுவதோடு, 60 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பது அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருத்துவ முகாம்களில் பங்கேற்ற தன்னார்வலர்கள், தேசிய தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுத்து அல்ஹோஸ்ன் அப்ளிகேசனில்(Alhosn app) கோல்ட் ஸ்டார் அல்லது E ஐகான் பெற்றவர்கள் வாரத்தில் ஒருமுறை PCR பரிசோதனை செய்ய தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருதியும், கடந்த காலங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மால்கள் நாற்பது சதவீத அளவில் இயங்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை அபுதாபியில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.