அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் வரும் டிசம்பர் 26 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Alhosn அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
An updated Green List of countries, regions and territories from where individuals can enter #AbuDhabi emirate has been released, effective 26 December 2021. pic.twitter.com/u0DORb6g5g
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 24, 2021
கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஒன்பதாவது நாள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட்டில் உள்ள நாடுகள்
- அல்பேனியா
- ஆர்மீனியா
- ஆஸ்திரேலியா
- ஆஸ்திரியா
- அஜர்பைஜான்
- பஹ்ரைன்
- பெலாரஸ்
- பெல்ஜியம்
- போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
- பிரேசில்
- பல்கேரியா
- பர்மா
- கம்போடியா
- கனடா
- சீனா
- குரோஷியா
- சைப்ரஸ்
- செக் குடியரசு
- டென்மார்க்
- பின்லாந்து
- பிரான்ஸ்
- ஜார்ஜியா
- ஜெர்மனி
- கிரீஸ்
- ஹாங்காங் (SAR)
- ஹங்கேரி
- இந்தோனேசியா
- ஈரான்
- ஈராக்
- இஸ்ரேல்
- இத்தாலி
- ஜப்பான்
- ஜோர்டான்
- கஜகஸ்தான்
- குவைத்
- கிர்கிஸ்தான்
- லாவோஸ்
- லாட்வியா
- லெபனான்
- லக்சம்பர்க்
- மலேசியா
- மாலத்தீவுகள்
- நெதர்லாந்து
- நார்வே
- ஓமன்
- பப்புவா நியூ கினியா
- பிலிப்பைன்ஸ்
- போலந்து
- போர்ச்சுகல்
- கத்தார்
- அயர்லாந்து
- குடியரசு
- ருமேனியா
- ரஷ்யா
- சவூதி
- அரேபியா
- செர்பியா
- சிங்கப்பூர்
- ஸ்லோவாக்கியா
- ஸ்லோவேனியா
- தென் கொரியா
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- சுவிட்சர்லாந்து
- சிரியா
- தைவான், சீனாவின் மாகாணம்
- தஜிகிஸ்தான்
- தாய்லாந்து
- ஏமன்
- துருக்கி
- துர்க்மெனிஸ்தான்
- உக்ரைன்
- ஐக்கிய இராச்சியம்
- அமெரிக்கா
- உஸ்பெகிஸ்தான்