UAE Tamil Web

இந்த 31 நாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் கிடையாது : புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்டை வெளியிட்டது அபுதாபி..!

Stock-India-airport-Indigo

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அபுதாபி வந்த 6 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் 6 & 12 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். அபுதாபி வந்த முதல் நாளில் இருந்து நாட்கள் கணக்கிடப்படும்.

ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  • ஆஸ்திரேலியா
  • அஜர்பைஜான்
  • பூட்டான்
  • புருனே
  • சீனா
  • பின்லாந்து
  • ஜெர்மனி
  • கிரீன்லாந்து
  • ஹாங்காங் (SAR)
  • ஐஸ்லாந்து
  • இஸ்ரேல்
  • ஜப்பான்
  • ஆஸ்திரியா
  • மால்டா
  • மொரீஷியஸ்
  • மால்டோவா
  • மொராக்கோ
  • நியூசிலாந்து
  • போர்ச்சுகல்
  • டென்மார்க்
  • சவூதி அரேபியா
  • சிங்கப்பூர்
  • தென் கொரியா
  • ஸ்பெயின்
  • சுவிட்சர்லாந்து
  • தைவான்
  • அமெரிக்கா
  • உஸ்பெகிஸ்தான்
  • இத்தாலி
  • நார்வே
  • ஸ்வீடன்

கடைசியாக ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட கிரீன் பட்டியலுடன் ஒப்பிடுகையில், பட்டியலில் ஆஸ்திரியா, டென்மார்க், நார்வே, பின்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. போலவே கியூபா, கிர்கிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap