கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாய் பொதுப்போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. தனி மனித இடைவேளி, முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவற்றை துபாய் போக்குவரத்து ஆணையம் கட்டாயப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது நோய் பரவல் குறைந்துள்ளதால் துபாயில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் துபாய் மெட்ரோவில் தனி மனித இடைவேளியை கடைபிடிக்குமாறு ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை போக்குவரத்து ஆணையம் நீக்கி வருகிறது. துபாய் மெட்ரோவில் இனி பயணிகள் தனி மனித இடைவெளியை பேணுதலோடு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு, தற்போது சகஜ நிலைக்கு துபாய் திரும்புவதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் நெட்டிசங்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்
