37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

திருச்சி மற்றும் சென்னையிலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் 27 விமானங்கள் – இன்றுமுதல் முன்பதிவு துவக்கம்.!

NAT-DUBAI-AIRPORT

உலக அளவில் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையே கொரோனாவால் ஆட்டம் கண்டிருக்கிறது. விமான இயக்கங்கள் தடைபட்டதால் மக்கள் ஆங்காகே சிக்கிக்கொண்டனர். இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அமீரகத்தில் இருந்து விடுமுறை, அவசர விடுப்பு காரணமாக இந்தியா சென்றவர்கள் யாருமே இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை தான்.

இப்படி அமீரகத்திலிருந்து தாயகம் சென்று மீண்டும் அமீரகம் திரும்ப முடியாமல் தவித்துவந்த இந்தியர்களுக்கு உதவிசெய்யும் வகையில் இந்திய – அமீரக அரசுகள் இணைந்து சிறப்பு விமான சேவையை ஏற்பாடு செய்திருந்தன. ஜூலை 12 முதல் 26 ஆம் தேதிவரையில் இயக்கப்பட்ட இந்த இந்தியா – அமீரகம் இடையேயான விமான சேவை தற்போது ஆகஸ்டு 15 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலிருந்து வந்தே பாரத் திட்டம் மற்றும் அமீரக விமான நிறுவனங்களின் மூலமாக இந்தியா செல்லும் விமானங்களில் இந்தியர்கள் அமீரகம் வரலாம் எனும் அடிப்படையில் இந்த சிறப்பு விமான சேவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 15 ஆம் தேதிவரையில் இந்தியாவின் திருச்சி, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம்,மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அமீரகத்திற்குப் பயணிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து அமீரகம் திரும்பும் விமானங்களின் பயண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1. 02/08/2020 சென்னை அபுதாபி
2. 03/08/2020 சென்னை துபாய்
3. 04/08/2020 சென்னை துபாய்
4. 06/08/2020 சென்னை ஷார்ஜா
5. 06/08/2020 சென்னை துபாய்
6. 08/08/2020 சென்னை ஷார்ஜா
7. 09/08/2020 சென்னை அபுதாபி
8. 09/08/2020 சென்னை அபுதாபி
9. 10/08/2020 சென்னை துபாய்
10. 11/08/2020 சென்னை துபாய்
11. 13/08/2020 சென்னை ஷார்ஜா
12. 13/08/2020 சென்னை அபுதாபி
13. 15/08/2020 சென்னை ஷார்ஜா

திருச்சியிலிருந்து அமீரகம் திரும்பும் விமானங்களின் பயண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1 04/08/2020 திருச்சி ஷார்ஜா
2 05/08/2020 திருச்சி துபாய்
3 05/08/2020 திருச்சி அபுதாபி
4 06/08/2020 திருச்சி ஷார்ஜா
5 07/08/2020 திருச்சி அபுதாபி
6 08/08/2020 திருச்சி அபுதாபி
7 11/08/2020 திருச்சி அபுதாபி
8 12/08/2020 திருச்சி துபாய்
9 12/08/2020 திருச்சி துபாய்
10 13/08/2020 திருச்சி ஷார்ஜா
11 13/08/2020 திருச்சி துபாய்
12 14/08/2020 திருச்சி அபுதாபி
13 14/08/2020 திருச்சி ஷார்ஜா
14 15/08/2020 திருச்சி அபுதாபி

ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமான நிறுவனம் வெளியிட்ட, ஜூலை 31 – ஆகஸ்டு 15 தேதிகளில் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பும் தனது விமானங்களின் பயண விபரங்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலமாக அமீரகம் திரும்புவோர், ICA அல்லது GDRFA விடம் பயணத்திற்கான அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அதேபோல, அரசு அங்கீகரித்த மையங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கையில் பயணிகள் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான ICA அல்லது GDRFA அனுமதி கொண்டிருப்போர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் ICA அல்லது GDRFA விடம் பயண அனுமதிகோரி மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும். அதேபோல அவர்களுக்கு விமான முன்பதிவு கட்டணம் திருப்பியளிக்கப்படமாட்டது என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அமீரகம் திரும்புவோர்க்கு கொரோனா பரிசோதனை அவசியமா?

அமீரகம் திரும்பும் அனைத்து மக்களும் கட்டாயம் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அமீரக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும். பியூர் ஹெல்த் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வகங்களுக்கும் கூடுதலாக இந்திய மற்றும் அமீரக அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷார்ஜா மற்றும் அபுதாபி திரும்பும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது  கொரோனா PCR பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. துபாயில் இந்த நடைமுறை ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!