UAE Tamil Web

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கிய அபுதாபி..!

abu-dhabi-media-tracer-

அபுதாபியில் கொரோனா நோயாளிகளின் உடனிருந்தவர்களை கண்டறிய காண்டாக்ட் ட்ரேசிங் அசிஸ்டன்ட் சிஸ்டம் (Contact Tracing Assistant System) என்னும் தொழில்நுட்பத்தை அபுதாபி முதன்மை சுகாதார மையம் மற்றும் அபுதாபி சுகாதாரத்துறை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளுடன் ஆன்லைன் மூலமாக உரையாடும் வசதிகொண்ட இந்த தொழில்நுட்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவலை குறைவான நேரத்தில் கண்டறிந்து அதனைத் தடுத்து, சமூகத்தின் சுகாதாரத்தை உறுதிபடுத்த இந்தத் திட்டம் உதவும்.

எப்படி இயங்குகிறது?

இதன்மூலம் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியானவுடன் அவருக்கு SMS வாயிலாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும். ஆன்லைன் மூலமாக உரையாடுவதற்கான லிங்க் இந்த SMS ல் இடம்பெறும்.

எமிரேட்ஸ் ஐடி சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று முடிந்தவுடன், குறிப்பிட்ட சில கேள்விகள் நோயாளியிடம் கேட்கப்படும். உதாரணமாக சமீபத்தில் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் யார்? எங்கே பணிபுரிகிறார்கள்? சமீபத்தில் கொரோனா பாசிட்டிவ் நபர்களுடன் உரையாடினீர்களா? போன்ற கேள்விகள் இடம்பெறும்.

இதன்மூலம் கிடைத்த தகவல்கள் அனைத்தும் விசாரணை தொடர்பு கண்காணிப்புக் குழுவிற்கு ( investigation and contact tracing team) வழங்கப்படும். பாசிட்டிவ் ஆக முடிவு வந்த 48 மணிநேரத்திற்குள் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலும் சேகரிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு வெளியே எவருக்கும் வழங்கப்படாது; ரகசியமாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயனர் அளித்த தகவல்களில் விடுபட்ட அல்லது தெளிவுபெற போன்கால்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலமாக, கொரோனா பரவலை உடனடியாக கண்டறியலாம் எனவும் இதன் வழியாக சமூக பாதுகாப்பை உறுதிசெய்யலாம் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

abu-dhabi-media-tracer-
0 Shares
Share via
Copy link