கொரோனா வைரஸ்: காலாவதியான அமீரக ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம்..!

driving license
Image Credits- Khaleej Times

அமீரகத்தில் அடுத்த மூன்று மாதங்களில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமங்களை வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 29) முதல் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விதிமீறல்கள், கருப்பு புள்ளிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ பரிசோதனை(eye test) ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பித்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு உரிமம் புதுப்பிக்கப்படும். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக வலைத்தளத்தின் ஸ்மார்ட் அப்ளிகேசன் மூலம் ஓட்டுநர்கள் இதை பயன்படுத்தலாம்.

source: khaleej times

Loading...