UAE Tamil Web

15 மாதத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 1..!

Dubai Airports turns 60

கொரோனா பரவல் காரணமாக 15 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 வரும் ஜூன் 24 ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெர்மினல் 2 மற்றும் 3 ல் இயக்கப்பட்டு வரும் வெளிநாட்டு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் இனி அதற்கான பிரத்யேக டெர்மினலான 1 மூலமாக  இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் கான்கோர்ஸ் டி பகுதியில் அமைந்துள்ள டெர்மினல் 1, ஆண்டுக்கு 18 மில்லியன் பயணிகள் பயணிக்கும் திறன் கொண்டது. முக்கிய சர்வதேச போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

துபாய் விமான நிலையங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”ஜூன் 24, 2021 அன்று, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 1 மற்றும் கான்கோர்ஸ் டி வசதிகள் மீண்டும் திறக்கப்படும். எங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான, மற்றும் எளிதான விமான பயணத்தை நாங்கள் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய, சில விமானங்களின் செயல்பாடுகளை டெர்மினல் 3 இலிருந்து டெர்மினல் 1 க்கு மாற்றுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் தேதிமுதல் இந்தியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் வரலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dubai Airports turns 60
0 Shares
Share via
Copy link