UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய PCR பரிசோதனை மையம் – ஒருநாளைக்கு 1 லட்சம் டெஸ்ட் எடுக்கலாம்…!

Stock-PCR-test-for-Covid19-

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா PCR பரிசோதனை நிலையம் ஜூன் 22 ஆம் தேதி தனது சேவையைத் துவங்கியது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மாதிரிகள் இங்கே பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் டெர்மினல் 2 க்கு அருகில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் பயணிகளின் கொரோனா மாதிரிகளை பரிசோதிக்க உலகத்தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உயர்தர PCR பரிசோதனை சாதனங்களினால் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். சில மணிநேரங்களிலேயே முடிவுகளையும் தெரிந்துகொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் விமான நிலையங்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் எளிமையான தகவல் பரிமாற்றத்தை வழிவகுக்கும் அரசு தளங்களுடன் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் விமான நிலையங்களின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம்,” கோடைக்கால விடுமுறையில் அதிக பயணிகளை எதிர்பார்க்கலாம். உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் சுகாதார விதிமுறைகளைக் கைடைபிடிக்கும் அதேநேரத்தில் பாதுகாப்பான, எளிதான விமான நிலைய பயணம் அமைய விரைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link