UAE Tamil Web

“இந்தியர்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கமுடியவில்லை, எங்களால் முடிந்ததை தருகிறோம்” – இந்தியாவிற்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய துபாய் நிறுவனம்..!

oxygen (2)

துபாயைச் சேர்ந்த பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ட்ரிஸ்டர், கொரோனாவால் தவித்துவரும் இந்தியாவிற்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டி செட்களை அளித்துள்ளது. ஒவ்வொரு செட்டின் மூலமாகவும் 5 லிட்டர் மற்றும் அதற்கும் குறைவான ஆக்சிஜன் தெரப்பி தேவைப்படும் நபர்களின் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.

இதுகுறித்துப் பேசிய இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூஜன் மைனே,” சுவாசித்தல் என்பது உலகத்துக் குடிமகன் ஒவ்வொருக்குமான உரிமை. இந்தியாவில் கொரோனா காரணமாக அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். என்னால் முடிந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவிற்கு அளித்திருக்கிறேன். தொழில் ஒருபுறம் இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றுவது என வரும்போது அதற்கே பெருநிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கும்” என்றார்.

இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெங்களூரில் உள்ள செயின்ட் மார்த்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

எங்களுடைய இந்த சிறிய உதவி கஷ்டத்தில் தவிக்கும் மக்களின் உயிரைக் காப்பாற்றும் என நம்புகிறோம். இந்தியா மீண்டு வர நாங்கள் பிரார்த்திக்கிறோம் என யூஜன் தெரிவித்தார்.

oxygen (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap