அமீரகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை சமீப வாரங்களாக 100 க்கும் கீழே பதிவாகிவருகிறது. இந்நிலையில் துபாய் சுற்றுலா மற்றும் வணிக சந்தைப்படுத்துதல் துறை 2 மீட்டர் சமூக இடைவெளி தேவையில்லை என தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கபே, ரெஸ்டாரன்ட், கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் இனி மக்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றினாலே போதுமானது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
