UAE Tamil Web

முகக் கவசங்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்த உணவகங்களுக்கு சீல் – அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

caution

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக துபாயிலுள்ள அல் பர்ஷா 1 பகுதியில் 4 ரெஸ்டாரண்ட்களுக்கு துபாய் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த உணவகங்களில் வாடிக்கையாளர்களை முக கவசம் அணியச் சொல்லி வலியுறுத்தாத காரணத்தினாலும், மேஜைகளுக்கு இடையில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று துபாய் நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 194 நிறுவனங்களில் 161 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கனகச்சிதமாக கடைபிடித்துள்ளனர். 25 நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறியதால் நகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் நான்கு கடைகளில் விதிமுறைகளை சரிவர பின்பற்றாத காரணத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அறிமுகப்படுத்திய கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு ஒரு மணிக்குள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும். ஒரு மணிக்கு மேல் உணவகத்தில் எவ்வித பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

மேலும் உணவகங்களின் ஒவ்வொரு மேஜைக்கும் இடையில் உள்ள தூரம் இரண்டு மீட்டரிலிருந்து மூன்று மீட்டராகவும், அதேபோல் ஒவ்வொரு மேஜையிலும் அமரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 7 ஆகவும், கஃபேக்களில் ஒரு மேஜைக்கு அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் (face mask) அணியவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

caution
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap