UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் தடுப்பூசி மையங்கள் இயங்காது – துபாய் அரசு அறிவிப்பு..!

UAE-vaccination

அமீரகத்தில் ஜூலை 19 முதல் 22 ஆம் தேதிவரையில் ஈத் அல் அத்ஹாவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நாட்களில் துபாயில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்படும் என துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒன் சென்ட்ரல் மற்றும் அல் பார்ஷா ஹால், ஜபீல், அல் மிஷார், அல் மன்கூல், அல் சஃபா, அல் த்வார், அல் பார்ஷா மற்றும் நாட் அல் ஹம்மர், அல் டுவார் டயாலிசிஸ் மையம் மற்றும் துபாய் பிசியோதெரபி மற்றும் புனர்வாழ்வு மையத்தில் உள்ள சுகாதார மையங்களில் உள்ள தடுப்பூசி பிரிவுகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் கார்ஹவுட் மருத்துவ உடற்தகுதி மையமும் மூடப்படும். இது வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். அப்டவுன் தொழில்சார் சுகாதார பரிசோதனை மையம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE-vaccination
0 Shares
Share via
Copy link