UAE Tamil Web

கொரோனா இருக்கா..? நிமிடத்தில் கண்டுபிடிக்கும் EDE ஸ்கேனர் – அபுதாபி அரசு ஒப்புதல்..!

EDE SCANER

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் EDE ஸ்கேனர்களைப் பயன்படுத்த அபுதாபி சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அபுதாபியின் மால்கள் உள்ளிட்ட பொது இடங்கள், நில மற்றும் நீர் எல்லைகள் மற்றும் சில குடியிருப்புப் பகுதிகளில் இந்த ஸ்கேனர்களைப் பயன்படுத்த அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

அதிநவீன EDE ஸ்கேனர்ககளை பயன்படுத்தக்கூடிய இடங்களின் பட்டியலை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான அரசின் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த ஸ்கேனர் அறிமுகமாகும்.

பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்குவதில் இந்த ஸ்கேனர்கள் மிக முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவியால் ஒருவர் ஸ்கேன் செய்யப்படும்போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் அவர் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்குள் அவர் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EDE SCANER
0 Shares
Share via
Copy link