UAE Tamil Web

சவூதி, குவைத் செல்ல முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்.! தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட் வழங்க ஏற்பாடு.!!

Freeticket

அமீரகம் வழியே சவூதி மற்றும் குவைத் செல்ல திட்டமிட்டு அமீரகம் வந்துள்ள இந்தியர்கள் பலர் கோவிட்-19 பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பாதி வழியிலேயே அமீரகத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

- Advertisment -

இந்தியர்கள் அமீரகம் வழியே சவூதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்கு செல்ல திட்டமிட வேண்டாம் என்று முதலில் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் அதனை தெடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் அறிவுறுத்தியிருப்பது குறித்து நாம் சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில்சவூதி மற்றும் குவைத் நாடுகளுக்கு பறக்க திட்டமிட்டு அமீரகம் வந்து சிக்கியுள்ள இந்தியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அவர்களுக்கு இலவசமாக தாயகம் திரும்ப டிக்கெட்டுகளை வழங்க முன்வந்துள்ளது.

ரிட்டர்ன் டிக்கெட்டுகளை வாங்க முடியாத பொருளாதார சூழலில் உள்ள நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தூதரக அதிகாரி ஒருவர் கலீஜ் டைம்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். தாயகம் திரும்ப வழியில்லாத நபர்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த இலவச டிக்கெட்டுகள் இந்திய சமூக நல நிதியத்தின் (ICWF) கீழ் நிதியுதவி செய்யப்படுகின்றன.

இந்திய சமூக குழுக்கள்(Indian community groups) மற்றும் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முறையே அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்பு கட்டணங்களாக 285 திர்ஹம்ஸ் மற்றும் 330 திர்ஹம்ஸ் விலை உள்ளடக்கியது. சவூதி மற்றும் குவைத் செல்ல முயன்று அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பேசிய தூதரக அதிகாரி ஒருவர், இங்கு சிக்கித் தவிக்கும் பயணிகளில் பெரும்பாலானோர் சவூதி அரேபியா மற்றும் குவைத்தில் தங்கள் வேலைகளுக்குத் திரும்ப விரும்பியவர்கள். தாங்கள் செல்ல விரும்பு நாடுகளில் என்னென்ன பயண கட்டுப்பாடுகளை நடைமுறையில் உள்ளன என்பதை அறிந்து, அந்நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

ஆனால் எப்படியாவது சவூதி மற்றும் குவைத்தில் தாங்கள் பார்த்த வேலைகளில் சென்று மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ள பல பயணிகள், இந்தியா திரும்ப செல்ல மனமில்லாமல் உள்ளனர். நிறைய பணம் செலவழித்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதால் இந்தியா திரும்புவதில் விருப்பம் இல்லை என்றும் ஒரு சிலர் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.