UAE Tamil Web

முக்கியச் செய்தி: அதிகரிக்கும் கொரோனா – பிற எமிரேட்களிலிருந்து அபுதாபி வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு..!

Abudhabi

அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அமீரகத்தின் பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம். அதன்படி,

  • கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் தங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டஸை காண்பிக்க வேண்டும்.
  • தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் அபுதாபி நோக்கிய பயணத்திற்கு முன்னதான 96 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா PCR பரிசோதனை முடிவுகளைக் காட்ட வேண்டும்.
  • மேலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என்ற இரு வகையினருமே EDE ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அபுதாபிக்கும் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் டிசம்பர் 30 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

PCR

Abudhabi
11 Shares
Share via
Copy link