UAE Tamil Web

அமீரகத்தை விட்டு வெளியேராமலேயே ‘விசிட் விசா’ ஸ்டேட்டசை மாற்றுவது எப்படி?

uae-visa

விசிட் விசா அல்லது டூரிஸ்ட் விசா மூலம் அமீரகம் வந்திருப்போரா நீங்கள்? உங்களுடைய விசா காலாவதியாகப் போகிறதா? UAE-ஐ விட்டு வெளியேற முடியவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் நாட்டை விட்டுச் செல்லாமலே புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விசிட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

துபாயின் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குனரகத்தின் (Dubai’s General Directorate of Residency and Foreigners Affairs) (GDRFA) இணையத்தளத்தின்படி, இந்த விசாவிற்கு உங்களின் ஸ்பான்சர் மூலமே விண்ணப்பிக்க முடியும். ஸ்பான்சர் என்பவர் நீங்கள் இந்நாட்டில் இருக்கும்வரை உங்களுக்காக முழுப் பொறுப்பேற்றுக்கொள்பவராவார். விசிட் விசா நபர்களுடைய ஸ்பான்சர்கள் பின்வருவோராக இருக்கலாம்.

  • ஹோட்டல் (அ) டூரிஸ்ட் கம்பெனிகள்.
  • ஏர்லைன் நிறுவனங்கள்
  • அமீரகத்தைச் சார்ந்த பிற நிறுவனங்கள்

மற்றும்  நண்பர்கள், உறவினர்கள் (அ) தனிநபர்கள் அமீரக வாசிகளாக இருப்பின் (விதிகளுக்குட்பட்டு) அவர்களும் உங்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

விசா ஸ்டேட்டஸ்-ஐ மாற்றுவது எப்படி?

டூரிஸ்ட்  விசா வைத்திருப்போர் காலாவதியாகப்போகும் தங்கள் விசாவை நீட்டிக்கவோ அல்லது புதிய விசாவாகவோ இனி எளிதில் மாற்றிக்கொள்ள முடியும்.

உங்களுக்கு விசா வழங்கிய (அமீரகத்திலுள்ள) ட்ராவல் ஏஜென்சி மூலமாக புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் உங்களுடைய புதிய விண்ணப்பம், பழைய விசாவின் காலாவதி தேதிக்கு 3 முதல் 5 நாட்களுக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கோவிட் வைரஸ் பரவல்  காரணமாக தேவையான ஆவனங்களை ஆன்லைன் மூலமாக அனுப்ப ஏஜென்சிக்கள் அனுமதிக்கின்றன. கட்டணங்கள் கூட இணைய பரிமாற்றம் என்பதால் முழு செயல்முறைகளும் மிக சுலபம்தான்.

நீங்கள் 3௦ அல்லது 9௦ நாட்களுக்குக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கலாம், இதற்கான கட்டணமானது நீட்டிப்பு நாட்களையும், விண்ணப்பிக்கும் எமிரேட்டையும் பொருத்தது.

தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் நகல்
  • பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்
  • பழைய டூரிஸ்ட்/ரத்தான விசாவின் நகல்
  • UAE-விற்குள் ஆன் அரிவல் (on arrival) மூலமாக வந்திருப்போர்கள் பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படங்கள் மட்டும் சமர்பித்தால் போதுமானது.

“உறவினர் அல்லது நண்பர்களுக்காக விண்ணப்பிப்போர் தங்கள் ரெசிடென்சி விசா நகலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.”

இதுகுறித்து கல்ஃப் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அல் அய்ன்-ல் உள்ள சைபீ டைப்பிங் சர்வீசஸ் நிறுவனத்தின்  மக்கள் தொடர்பு அதிகாரி சர்தார் அலி, “இந்த விசா மாற்றமானது மிக எளிதானது மற்றும் ‘இன்-அவுட்’ செயல்முறையாகும். இதற்கு ஆகும் முழு கட்டணமும் ஸ்டேட்டஸ் மாற்ற மற்றும் புதிய விசாவுக்கு ஆகும் கட்டணங்களை உள்ளடக்கியது” என்றார்.

இதுபற்றி கூறுகையில், துபாயை சார்ந்த ஃபர்ஸ்ட் கேட் பிசினஸ் சர்வீஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சிராஜுதீன் உமர், “கட்டணமானது எமிரேட்களையும் ஏஜென்சி நிறுவனங்களையும் பொருத்து வேறுபடும்” என்றார்.

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ரஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்களில் உள்ள ட்ராவல் நிறுவனங்களின் கட்டண  விபரம்:

  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா ஒரு மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் 1100 திர்ஹம்ஸ்
  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா மூன்று மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் 1450 திர்ஹம்ஸ்

துபாய்

  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா மூன்று மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் 1800 திர்ஹம்ஸ்
  • உள்நாட்டு டூரிஸ்ட் விசா மூன்று மாதத்திற்கான ஸ்டேட்டஸ் உடன் 2100 திர்ஹம்ஸ்

“இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்” என உமர் குறிப்பிட்டார்.

புதிய விசா கிடைக்க எத்தனை நாளாகும்?

இந்த முழு செயல்பாடும் நான்கு வேலை நாட்களில் முடிந்து விடக்கூடியதே. எனினும் அவசர காலங்களில் ட்ராவல் ஏஜென்சிக்கள் கூடுதல் கட்டணங்களுடன் உடனடி சேவைகளை வழங்கலாம்.

uae-visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap