UAE Tamil Web

இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்புவோர் செய்யவேண்டியவை: ICA, GDRFA அனுமதி முதல் அனைத்து தகவல்களும்..!

INDIA-AIRPORT-CHENNAI-

அமீரகத்திற்கு வர அல்லது அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறீர்களா? அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய பயண விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது உங்களுடைய பயண திட்டத்தை உறுதிப்படுத்த உதவும்.

துபாய்

GDRFA அனுமதி

துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்னர் GDRFA விடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம். அனுமதி பெற விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ICA அனுமதி

துபாயைத் தவிர மற்ற எமிரேட்டுகளில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களது பயணத்திற்கு முன்னர் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) அமீரகத்திற்குள் நுழைய தங்களது ரெசிடென்ஸ் விசா தகுதியுடையதா என்பதை சரிபார்த்தல் அவசியம்.

அமீரக குடியிருப்பாளர்கள் ICA வின் இணையதள முகவரிக்குச் சென்று உங்களது பாஸ்போர்ட் எண், எமிரேட்ஸ் ஐடி எண், பாஸ்போர்ட் வகை மற்றும் நீங்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனை உள்ளீடு செய்து நீங்கள் அமீரகம் திரும்ப தகுதியுடையவரா? என்பதை வினாடிகளில் தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கொரோனா பரிசோதனை 

வெளிநாட்டில் இருந்து துபாய் திரும்பும் ஏமிராட்டிகள் தங்களது பயணத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனத் தேவையில்லை. அவர் எந்த நாட்டில் எத்தனை காலம் தங்கியிருந்தாலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் துபாய்க்கு வந்தவுடன் PCR பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

அதேநேரத்தில், துபாய் திரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் தங்களது பயணத்திற்கு முன்னர் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும். சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து துபாய் வழியாக வேறுநாடுகளுக்குப் பயணிக்கும் நபர்களும் தங்களது பயணத்திற்கு முன்பே PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

துபாய் வழியாக பிற நாடுகளுக்குப் பயணிக்கும் நபர்கள் தாங்கள் செல்லும் நாடு பயணத்திற்கு முன்பே PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும் என அறிவித்திருந்தால் அவர்களும் கண்டிப்பாக பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

துபாயில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏமிராட்டிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் செல்லும் நாடு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தால் அவர்களும் கண்டிப்பாக பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

பயணத்திற்கு முன்பு நீங்கள் பயணிக்க இருக்கும் விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பயண விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? என சரிபார்த்துக்கொள்வது சிறந்தது.

அபுதாபி

அபுதாபியில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல மற்றும் வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வர பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது.

1.அபுதாபிக்குள் நுழைய நீங்கள் தகுதியுடையவரா? என்பதைத் தெரிந்துகொள்தல்

அமீரக குடியிருப்பாளர்கள் ICA வின் இணையதள முகவரிக்குச் சென்று உங்களது பாஸ்போர்ட் எண், எமிரேட்ஸ் ஐடி எண், பாஸ்போர்ட் வகை மற்றும் நீங்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனை உள்ளீடு செய்து நீங்கள் அமீரகம் திரும்ப தகுதியுடையவரா? என்பதை வினாடிகளில் தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன்னர் மேற்கண்ட பரிசோதனையை மேற்கொள்ளவும். மேலும், உங்களுடைய வருகை குறித்து பரிசோதிக்கையில் பிரவுசர் டேட்டாவை அவ்வப்போது கிளியர் செய்துகொள்ளவும். ஏனெனில் ICA இணையதளம் அடிக்கடி அப்டேட் ஆகும்.

2. டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்.

3.கொரோனா பரிசோதனை

உங்களுடைய பயண நேரத்திற்கு முன்னதாக 96 மணி நேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த கால நேரத்தில் மாற்றம் இருக்கலாம்.

4.புதுப்பிக்கப்பட்ட தகவலை சரிபார்த்தல்

பயணத்திற்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்தல் அவசியம்.

5. உங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்

நீங்கள் அபுதாபி வந்தடைந்த பின்னர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

6.விமான நிலையத்தில் PCR பரிசோதனை எடுத்துகொள்ள வேண்டும்.

7. ALHOSN அப்ளிகேஷனை தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

8. 10 நாட்களுக்கு குவாரண்டைன் செய்துகொள்ள வேண்டும்.

டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பயணிகள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அமீரக அரசால் கிரீன் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் எமிரேட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் 

  • ஆஸ்திரேலியா
  • புருனே
  • சீனா
  • கிரீஸ்
  • கிரீன்லாந்து
  • ஹாங்காங்
  • மலேசியா
  • மொரீஷியஸ்
  • நியூசிலாந்து
  • சவுதி அரேபியா
  • சிங்கப்பூர்
  • தைவான்
  • தஜிகிஸ்தான்
  • தாய்லாந்து
  • உஸ்பெகிஸ்தான்
  • வியட்நாம்

ஷார்ஜா

ஷார்ஜா விமான நிலையம் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி, புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை வெளியிட்டது. அவை குறித்து கீழே காண்போம்.

கொரோனா பரிசோதனை

ஷார்ஜா விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு முன்பாக 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும்.

விமான நிலையத்தில் அனைத்து பிரயாணிகளும் கொரோனா PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

வெளிநாடுகளில் இருந்து ஷார்ஜா வழியாக வேறுநாடுகளுக்குச் செல்லும் தனிபர்கள், அவர்கள் செல்லும் நாடு தெரிவித்திருக்கும்பட்சத்தில் கொரோனா பரிசோதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும் என ஷார்ஜா விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கம் மூலமாகத் தெரிவித்திருக்கிறது.

அவர்களுக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு

அனைத்து சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது PCR பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரையில் அவர்களுடைய மருத்துவ மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை ஏற்கும் வகையில் காப்பீடு வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ICA அல்லது GDRFA அனுமதி

அபுதாபி அல்லது அல் அய்னில் வழங்கப்பட்ட ரெசிடென்ட் விசாவை வைத்திருப்போர் ICA அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும் என ஷார்ஜா, ராஸ் அல் கைமாவில் இருந்து இயக்கப்படும் ஏர் அரேபியா விமான நிறுவனம் மற்றும் அபுதாபி விமான நிலையம் ஆகியவை அக்டோபர் 13 ஆம் தேதி தெரிவித்திருந்தன.

அபுதாபி அல்லது அல் அய்னில் வழங்கப்பட்ட ரெசிடென்ட் விசாவை வைத்திருப்போர் தங்களுடைய விசா அமீரகம் திரும்ப தகுதியுடையதா என்பதை ICA இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

வேறு எமிரேட்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் எவ்வித முன்கூட்டிய ஒப்புதல் பெற அவசியமில்லை என விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

குவாரண்டைன்

அனைத்து பயணிகளும் PCR பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரையில் தங்களது வசிப்பிடங்களில் குவரண்டைன் செய்துகொள்ள வேண்டும். சோதனை முடிவு நெகட்டிவ் ஆக வரும்பட்சத்தில் அவர்கள் சுதந்திரமாக நடமாடலாம்.

ஒருவேளை, பாசிட்டிவாக முடிவு வருமேயானால் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் அறிவுறுத்திய காலத்திற்கு நீங்கள் குவாரண்டைனில் இருத்தல் வேண்டும்.

அதேபோல, பாசிட்டிவாக வந்தவர்களின் குவாரண்டைன் மற்றும் மருத்துவ செலவுகளை அவர்களே அல்லது அவர்களின் ஸ்பான்சர்கள் ஏற்கவேண்டும். குவாரண்டைன் விதிமுறைகளை மீறினால் சட்ட விளைவுகள் மற்றும் அபராதத்தினை சந்திக்க வேண்டியிருக்கும்.

அமீரக சுகாதாரத்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ALHOSN அப்ளிகேஷனை அனைத்து பயணிகளும் தரவிரக்கிக்கொள்ளவேண்டும்.

INDIA-AIRPORT-CHENNAI-
0 Shares
Share via
Copy link