அபுதாபியில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வர இன்னும் 10 நாட்களே இருப்பதாகவும் ஆகவே மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
There is less than 10 days to go before entry to some public places in Abu Dhabi is allowed only for those vaccinated. The decision made by Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee will come into effect 20 August 2021. pic.twitter.com/kDU2JdVS2H
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) August 10, 2021
ஆகஸ்ட் 20 முதல் கீழ்கண்ட இடங்களுக்குச் செல்ல நீங்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்து இருக்க வேண்டும்.
- ஷாப்பிங் சென்டர்ஸ்
- ரெஸ்டாரன்ட் மற்றும் கஃபே
- உடற்பயிற்சிக் கூடங்கள்
- விளையாட்டு கூடங்கள்
- புத்துணர்வு மையங்கள்
- சுகாதார கிளப்புகள் மற்றும் ரிசார்ட்டுகள்
- பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
- பள்ளிகள் மற்றும் நர்சரிகள்
- அருங்காட்சியங்கள்
- கலாச்சார மையங்கள்
- ஷாப்பிங் செண்டருக்குள் இல்லாத பிற சில்லறை வர்த்தக ஸ்தாபனங்கள்
- தீம் பார்க்குகள்
தடுப்பூசி எடுத்துக் எடுத்துக்கொள்வதிலிருந்து முறையாக விலக்குப் பெற்றவர்கள், அதேபோல 16 மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களும் மேற்கண்ட இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்கெட் மற்றும் மருந்தகங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
