UAE Tamil Web

இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களைக் கண்காணிக்க ரேடாரை பயன்படுத்தும் அபுதாபி காவல்துறை – சிக்கினால் அபராதம் கன்ஃபார்ம்..!

dubai-sterilisation-coronavirus-2

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அபுதாபி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய சுத்திகரிப்புப் பணிகள் ஜூலை 19 ஆம் தேதிமுதல் துவங்க இருக்கின்றன. இந்த நேரங்களில் வெளியே சுற்றுபவர்களைக் கண்காணிக்க ரேடாரைப் பயன்படுத்த இருக்கிறது அபுதாபி காவல்துறை. இதில் சிக்குபவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரையில் இப்பணிகள் நடைபெறும் எனவும் இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நேரங்களில் போதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் மிகவும் அவசர காரணங்களுக்காக வெளியே செல்வோர் அதற்கான அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும். அனுமதியைப் பெற www.adpolice.gov.ae என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பொது இடங்களில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கைக்கும் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, அபுதாபி கடற்கரைகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள ஸ்பாக்கள், பேருந்துகள் மற்றும் பெர்ரிஸ் ஆகியவை 50 சதவீத மக்களுடன் மட்டுமே இயங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள் 40% திறனுடனும் தியேட்டர்கள் 30% திறனுடனும் இயங்கவுள்ளன. மேலும் 5 பேர் செல்லும் டாக்சிக்களில் இனி 3 பேரும் 7 பேர் செல்லகூடிய டாக்சிக்களில் அதிகபட்சம் 4 பேர் மட்டுமே பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dubai-sterilisation-coronavirus-2
0 Shares
Share via
Copy link