கொரோனா வைரஸ் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் இரண்டு வாரம் மூடல்.! எப்பொழுது முதல்.?

airport

கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளின்படி துபாயில் உள்ள விமான நிலையங்கள் மார்ச் 26 முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று (March 23 2020) வெளியிடப்பட்ட அறிக்கையில், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) ஆகியவை பொதுமக்களுக்கு மறு அறிவிப்பு அறிவிக்கப்படும் வரை மூடப்படும் என்று துபாய் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.

முழு அறிக்கை:

இதற்கு முன்னர் இப்படி பட்ட சூழ்நிலையை கண்டிராத இந்த காலங்களில், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களையும் மற்றும் துபாயின் வழியாக செல்லும் மற்றும் வரும் விமானங்களையும் (Transit Flights) நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

மறு மதிப்பீட்டிற்கு உட்பட்ட இந்த விமான நிலைய முடக்கம், கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் 26 (வியாழக்கிழமை) இரவு 11:59 மணிக்கு தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

இந்த நேரத்தில், முக்கிய சரக்கு மற்றும் அவசரகால வெளியேற்ற விமானங்கள் இயங்கும். இருப்பினும் மற்ற அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்த சவாலான சூழ்நிலையில் நீங்கள் அளிக்கும் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி. துபாய் விமான நிலையங்களில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், எங்கள் சமூகம் மற்றும் எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, ​​விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள், சேவை கூட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். இனி பாதுகாப்பான சூழ்நிலை என்று கருதப்பட்டவுடன் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை உறுதிசெய்கிறோம்.

அதுவரையிலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இருப்பினும், மறு மதிப்பீட்டிற்கு உட்பட்டு விமான நிலையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று DXB ட்வீட் செய்துள்ளது.

Loading...