UAE Tamil Web

அபுதாபி: தடுப்பூசி மற்றும் பரிசோதனைத் திட்டம் துவக்கம் – பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அரசு வேண்டுகோள்..!

PCR Test

அபுதாபியில் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை சேவையை வழங்கும் சேவையை தீவிரப்படுத்தும் திட்டத்திற்கு அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

முஸாஃபா பகுதியில் இன்று துவங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கம் தொற்றுப் பரவும் இடங்களைக் கண்டறிந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதே ஆகும்.

படிப்படியாக முஸாஃபாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இதனால் தினசரி வணிக நடவடிக்கைகள் பாதிப்படையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது இப்பகுதியில் மீண்டும் பரிசோதனை திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக 6 வாரங்களுக்கு பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சக மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமீரக அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக ஆங்காங்கே இலவச கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அபுதாபி, முஸாஃபா 32 ஆம் பகுதியிலும் இலவச கொரோனா பரிசோதனை மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

PCR Test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap