UAE Tamil Web

“தன்னார்வலர்கள் தேவை” – துபாய் காவல்துறையின் அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Dubai Police

துபாய் காவல்துறையின் குதிரைப் பிரிவில் பணியாற்ற தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட இருக்கிறார்கள்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழக்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

  • நல்ல உடற்தகுதி
  • 21 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.
  • ஹெல்மட் அணிந்து குதிரை சவாரி செய்யத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

அல் கவனீஜ், அல் படா, அல் வார்கா, உம் சகேம், அல் பார்ஷா, சிட்டி வாக், JBR மற்றும் பொலிவார்ட் ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் குதிரைப் பிரிவு இயக்குனர் மேஜர் ஜெனரல் முகமது அல் அத்ப்,” மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாம் அனைவருமே நமக்கான பொறுப்பு எனப் பொருள்படும் All is Responsible for All என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களும் கொரோனா விழிப்புணர்வை மக்களிடையே எங்களுடன் இணைந்து ஏற்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கடந்தவருடம்  2,298 குதிரைப் பிரிவு வீரர்கள் 4580 மக்கள் மற்றும் 11562 வாகனவோட்டிகளிடம் பெருநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் 209 வாகனங்களை பறிமுதல் செய்யவும் விதிமீறலில் ஈடுபட்ட 5,146 பாதசாரிகளை கண்காணிக்கவும் 47 போக்குவரத்து அபராதங்கள் மற்றும் எச்சரிக்கையை இவ்வீரர்கள் விடுத்துள்ளார்கள்.

தகுதியுள்ள நபர்கள் https://www.dubaipolice.gov.ae. இந்த இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

Dubai Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap