UAE Tamil Web

கொரோனாவின் மோசமான பகுதியை கடந்துவிட்டோம் – துபாய் ஆட்சியாளர் மகிழ்ச்சி!

கொரோனா பரவலின் மோசமான பகுதியை கடந்துவிட்டதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துபாய் ஆட்சியாளர் ரஷீத், கொரோனா பேரிடரின்போது அமீரக சுகாதாரத்துறை ஒரே அணியில் ஒன்றிணைந்து பணியாற்றியதாக பாராட்டியுள்ளார். கொரோனாவை வெல்ல உலக நாடுகளுக்கு இணையாக அமீரகமும் சிறப்பாக செயலாற்றி இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவின் மோசமான பகுதியை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டதாகவும் துபாய் ஆட்சியாளர் ரஷீத் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டிற்குள் அமீரகத்தில் 100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 Share
Share via
Copy link