UAE Tamil Web

ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் – அமீரக கல்வித்துறை அறிவிப்பு!

கோடை விடுமுறைக்குப் பிறகு அடுத்த மாதம் முதல் அமீரகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்க இருக்கின்றன. கொரோனா பரவலுக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணத்தை கொண்டு ஆசிரியர்கள் முகக்கவசத்தை கழற்றக்கூடாது என்றும் மாணவர்களிடம் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை வாழ்த்தும்போது அவர்களுக்கு கைக்கொடுப்பதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். இதேபோல முகக்கவசங்களை முறையாக அதற்கான குப்பை கூடைகளில் டிஸ்போஸ் செய்யவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதித்து ஏதேனும் நோய் பாதிப்பு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மாணவர்களிடம் இருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

1 Share
Share via
Copy link