UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துதடை குறித்து எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கை..!

Etihad_Air_

இந்தியா – அமீரகம் இடையிலான விமானப் போக்குவரத்துத்தடை ஜூலை 6 ஆம் தேதிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பிய அந்நிறுவனம் அதில்,” இந்தியா – அமீரகம் இடையே ஜூலை 6 ஆம் தேதிவரையில் விமானப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மேலும் நீட்டிக்கப்படலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

KT29208616

இருப்பினும் அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்கள் தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணித்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

இந்தியா – அமீரகம் இடையே பயணிக்க அனுமதிபெற்றவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Etihad_Air_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap