UAE Tamil Web

இந்தியா – அமீரகம் போக்குவரத்துத் தடை: கடைசி நேர டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு..!

Airport (2)

இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்திற்கு 10 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதால், கடைசி நேர டிக்கெட்டினைப் பெற கடந்த சில மணிநேரங்களில் மக்களிடையே கடும் போட்டி நிலவுவதாகத் முஸாபிர் இணையதளத்தின் நிர்வாக இயக்குனர் ரதீஸ் பாபு தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து விமானங்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் மக்கள் கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து பின்னர் அமீரகம் வர முயற்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் இன்று உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது. அவர்களது சேவை வழங்கு தளத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சரி செய்யபப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான முஸாபிர் இணையதளத்தின் இயக்குனர் ரதீஸ் PCR பரிசோதனை குறித்துப் பேசுகையில்,” இன்று இரவே சிலர் PCR பரிசோதனை எடுக்க விரைந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு நாளை அதன் முடிவுகள் கிடைக்கும். ஆகவே சனிக்கிழமை அவர்கள் பயணிக்கலாம். (சனிக்கிழமை இரவு 11.49 முதல் தடை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது) எனத் தெரிவித்தார்.

டிமாண்ட் அதிகமாக இருப்பதால் தனி விமானம் இயக்குவது குறித்து ஏஜெண்ட்கள் கலந்தாலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். தற்போதைய நேரத்தில் இந்தியா – அமீரகம் இடையேயான விமான டிக்கெட் 1000 திர்ஹம்ஸ்க்கு விற்பனை ஆவதாகவும் மக்கள் மும்பை, டெல்லி மற்றும் வளைகுடா நாடுகள் வழியாக அமீரகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய MICE மற்றும் ஹாலிடேஸ், கலதாரி சர்வதேச போக்குவரத்து சேவை நிறுவனத்தின் மேலாளர் ராஜா மிர் வாசிம் பேசுகையில்,” சில இந்தியப் பயணிகள் வரவிருக்கும் சில நாட்களுக்கான தங்களது விமான டிக்கெட்டை ரத்து செய்திருக்கின்றனர். இன்னும் நாட்களுக்கு டிமாண்ட் நிச்சயம் அதிகரிக்கும்” என்றார்.

Airport (2)
0 Shares
Share via
Copy link