UAE Tamil Web

கொரோனா பாதிப்பின் உச்சத்தில் இந்தியா: அமீரகம் – இந்தியா இடையே விமானப் போக்குவரத்து பாதிப்பு..!

NAT-INDIA-AIRPORT-

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போலப் பரவிவருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் நிலைமை கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது. இறந்தவர்களைத் தகனம் செய்ய மயானங்களில் இடம் இல்லாததால் ஆங்காங்கே சடலங்கள் எரியூட்டப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் இடம் இல்லை; இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என ஒட்டுமொத்த இந்தியாவும் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் அமீரகம் – இந்தியா இடையிலான போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அமீரக வாழ் இந்தியர்கள் தாயகம் செல்ல அச்சப்படுவதாகவும் நிலைமை சரியான பிறகே தங்களது பயணத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்துவருகின்றனர்.

கொரோனா அச்சத்தால் இந்தியாவிற்கு மக்கள் செல்லத் தயங்குகிறார்கள். விமான டிக்கெட் முன்பதிவு கணிசமாகக் குறைந்துவிட்டது என டிராவல்ஸ் ஏஜென்சிக்கள் தெரிவித்துவருகின்றன.

இதுகுறித்துப் பேசிய தீனார் டிராவல்ஸ் & டூரிசம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஃபைசல் ஃபைசல் மொஹ்சின்,” இரட்டை உருமாறிய கொரோனா பரவல் (double mutant strain) இந்தியாவில் அதிகரித்திருப்பதால் அமீரகம் – இந்தியா இடையேயான டிக்கெட் முன்பதிவு 50% குறைந்துள்ளது. கேரளா மற்றும் இந்தியாவின் பிற இடங்களுக்குச் செல்ல நாங்கள் அளிக்கும் விடுமுறை கால சிறப்பு சுற்றுலா திட்டத்தில் இதுவரையில் யாருமே இணையவில்லை. நிலைமை சீராகும்வரையில் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

சிட்டி ஒன் டூரிசம் & டிராவல்ஸ் LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனித் ஷா இதுபற்றிப் பேசுகையில்,” அமீரகம் இந்தியா இடையே போக்குவரத்து சீராகும் என எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த இரட்டை உருமாறிய கொரோனா பரவல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது” என்றார்.

அதென்ன இரட்டை உருமாறிய கொரோனா?

புதியவகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் தான் முதலில் பரவத் துவங்கியது. ஒவ்வொரு வைரசும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேறாக மாறும். அதாவது அதன் டி.என்.ஏ வில் மாற்றம் ஏற்பட்டு அதன் குணாதிசயங்களும் மாறுதல் அடையும். அதன்காரணமாகவே புதிய வகை கொரோனா வைரஸில் வீரியம் அதிகளவில் இருக்கிறது.

இந்தப் புதியவகை கொரோனா வைரஸ் (new variant) B. 1.617 என்று அழைக்கப்படுகிறது. இதன் டி.என்.ஏ வில் மாற்றம் பெற்று உருமாறி தற்போது இரண்டு வகையாகப் பிரிந்திருக்கின்றன. அவை E484Q மற்றும் L452R ஆகும். இந்த உருமாற்றமே மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஒருசாரர் தெரிவிக்கின்றனர்.

NAT-INDIA-AIRPORT-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap