UAE Tamil Web

இந்தியாவில் இருந்து எப்படியாவது அமீரகம் வரத் துடிக்கும் மக்கள் – தடை நெருங்குவதால் பெருகும் கூட்டம்..!

Airport

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியா – அமீரகம் இடையே விமானப்போக்குவரத்து 10 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடைசி நேர விமானங்களில் அமீரகத்திற்குப் பயணிக்க இந்தியர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இதனை விமான நிறுவனங்களும் உறுதிசெய்துள்ள நிலையில், தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா – துபாய் இடையே பயணிக்கக் காத்திருந்த பெண்மணி ஒருவர், இந்தத் தடை தேதிகளால் குழம்பி தனது டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை விமான டிக்கெட் ஒன்றை எடுத்து ஒருவழியாக துபாய் வந்து சேர்ந்திருக்கிறார்.

பொதுவாகவே, இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து மிகவும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக மும்பை, டெல்லி – அமீரகம். சில பயணிகள் அமெரிக்கா, கனடா சென்று அங்கிருந்து அமீரகம் வரவும் முயற்சித்துவருகிறார்கள்.

இது குறித்துப் பேசிய ஜெட்செட்கோ நிறுவனத்தின் நிறுவனர் கனிகா தேக்ரிவால்,” இந்தத் தடை குறித்த அறிவிப்பு பலரையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்த உடனேயே பலரும் தனிவிமானம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். தனி விமானம் அல்லது சிறிய விமானங்களை இந்தியா – துபாய் – இந்தியா இயக்க 30 முதல் 40 லட்சம் வரையில் செலவாகும். பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்கு முன்வருவார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Airport
0 Shares
Share via
Copy link