22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் பொது போக்குவரத்து முழுவதும் தடை.! நாடு முழுவதும் மூன்று நாள் சுத்திகரிப்பு பணி.!

Sterilisation_170f9f8081b_large

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பொது இடங்கள், வீதிகள், பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவை ஆகியவற்றை சுத்திகரிக்க மூன்று நாள் தேசிய சுத்திகரிப்பு திட்டம் (National Sterilisation Programme) மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு (March 26, 2020) 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (March 29, 2020) காலை 6 மணி வரை தொடங்கும் இந்த சுத்திகரிப்பு திட்டம், சுகாதார & தடுப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் நாட்டில் உள்ள அனைத்து தொடர்புடைய மத்திய மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும் நேரங்களில், நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் மெட்ரோ சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும் நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் உணவு, அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதைத் தவிர வேறு எந்த தேவையில்லாத காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தன.

எந்தத்துறை சார்ந்தவர்கள் வெளியே செல்லலாம்?

எரிசக்தி, தொலைத்தொடர்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் காவல் துறைகள் போன்ற முக்கிய துறைகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளன.

மேலும் ராணுவம், தபால், மருந்து, நீர் மற்றும் உணவு, விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து மற்றும் பாஸ்போர்ட் துறைகளில் பணிபுரிபவர்களையும் வீடுகளை விட்டு வெளியேறலாம் என்று அமைச்சகங்கள் அனுமதி தெரிவித்துள்ளன.

சுத்திகரிப்பு காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறுபவர்களின் தொழிலாளர் அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளை அதிகாரிகள் சரிபார்த்து, அவர்கள் இந்தத் துறைகளில் பணியாற்றுவதை உறுதி செய்த பின்பே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.



error: Alert: Content is protected !!