UAE Tamil Web

அபுதாபி: வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டது அரசு..!

Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--

அபுதாபியில் கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கான வீட்டு குவாரண்டைன் விதிமுறைகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இன்று முதல் (15 ஆகஸ்டு) இந்த  நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி,

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 7 நாட்கள் குவாரண்டைன் இருத்தல் வேண்டும். 6 வது நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். முடிவு நெகட்டிவ் என வரும்பட்சத்தில் 7 வது நாள் முடிந்தவுடன் கண்காணிப்பு கைப்பட்டையை அகற்றலாம்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் 10 நாட்கள் குவாரண்டைன் இருத்தல் வேண்டும். 9 வது நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். முடிவு நெகட்டிவ் என வரும்பட்சத்தில் 9 வது நாள் முடிந்தவுடன் கண்காணிப்பு கைப்பட்டையை அகற்றலாம்.

வீட்டு குவாரண்டைன் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள், சேஹாவின் பின்வரும் பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று இலவச PCR பரிசோதனையை மேற்கொண்டு, கண்காணிப்புக் கைப்பட்டையை அகற்றலாம்.

  • அபுதாபி நகரத்தின் சயீத் போர்ட்டில் அமைந்துள்ள முதன்மை மதிப்பீட்டு மையங்கள்.
  • அல் அய்ன் கன்வென்ஷன் சென்டர்
  • அல் தாஃப்ராவில் உள்ள மதீனத் சயீத்
  • அல் தாஃப்ராவில் உள்ள அனைத்து சேஹா மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெறலாம்.

 

Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--
3 Shares
Share via
Copy link