UAE Tamil Web

துபாய் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை மையம் – 3 மணிநேரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு..!

2020_dubai_international_airport

அரேபியன் டிராவல் மார்கெட் 2021 நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான பால் கிரிஃபித்ஸ், விரைவில் துபாய் விமான நிலையத்தில் PCR பரிசோதனை மையம் நிறுவப்படும் எனவும் பரிசோதனை முடிவுகள் 3-4 மணிநேரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”விமான நிலையத்தின் இரண்டாம் டெர்மினலில் இந்த ஆய்வகம் அமைய இருக்கிறது. பயணிகளின் மருத்துவ பாதுகாப்பிற்கு துபாய் விமான நிலையம் முக்கியத்துவம் அளிக்கும். இதன்காரணமாகவே பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் இடமாக துபாய் உள்ளது” என்றார்.

“உலகம் முழுவதிலும் பையோமெட்ரிக் வாக்சின் பாஸ்போர்ட் இருந்தால் அது PCR பரிசோதனைக்கு மாற்றாக அமையலாம். நம்மிடம் கொரோனா குறித்த அப்ளிகேஷன்கள் உள்ளன. உலக நாடுகள் இதனைப் பின்பற்றினால் பயணியின் தடுப்பூசி நிலவரத்தை நம்மால் எளிதில் கண்காணிக்க முடியும். IATA மூலமாக நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்” என பால் தெரிவித்தார்.

அதேபோல, டிஜிட்டல் வாக்சின் பாஸ்போர்ட் விஷயத்தைப் பொறுத்தவரையில் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளின் தனியுரிமைகளில் தலையிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக எடுத்துக்காட்டு ஒன்றினை சுட்டிக்காட்டியவர், “ஷாப்பிங் செண்டரில் நமது மொபைல் வாலெட் மூலமாக பணம் செலுத்தும்போது, பில் கவுண்டரில் இருப்பவருக்கு நம்முடைய வங்கியில் இருக்கும் மீதிப் பணம் பற்றித் தெரிவதில்லை. அதேபோலத்தான், பயணிகள் போக்குவரத்திற்கு தகுதியானவர்கள் என்பதை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.

2020_dubai_international_airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap