UAE Tamil Web

புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்டை வெளியிட்டது அபுதாபி : இந்த 82 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவாரண்டைன் கிடையாது..!

AIRPORT

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட பட்டியல் அக்டோபர் 8 ஆம் தேதி நள்ளிரவு 12.01 முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கிரீன் பட்டியல்

  1. அல்பேனியா
  2. ஆர்மீனியா
  3. ஆஸ்திரேலியா
  4. ஆஸ்திரியா
  5. அஜர்பைஜான்
  6. பஹ்ரைன்
  7. பெலாரஸ்
  8. பெல்ஜியம்
  9. பெலிஸ்
  10. பூட்டான்
  11. பொலிவியா
  12. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
  13. பிரேசில்
  14. புருனே
  15. பல்கேரியா
  16. பர்மா
  17. புருண்டி
  18. கனடா
  19. சிலி
  20. சீனா
  21. கொலம்பியா
  22. கொமொரோஸ்
  23. குரோஷியா
  24. சைப்ரஸ்
  25. செக் குடியரசு
  26. டென்மார்க்
  27. ஈக்வடார்
  28. எஸ்டோனியா
  29. பின்லாந்து
  30. பிரான்ஸ்
  31. ஜார்ஜியா
  32. ஜெர்மனி
  33. கிரீஸ்
  34. ஹாலந்து
  35. ஹாங்காங் (SAR)
  36. ஹங்கேரி
  37. ஐஸ்லாந்து
  38. இந்தோனேசியா
  39. இஸ்ரேல்
  40. இத்தாலி
  41. ஜப்பான்
  42. ஜோர்டான்
  43. கஜகஸ்தான்
  44. குவைத்
  45. கிர்கிஸ்தான்
  46. லிச்சென்ஸ்டீன்
  47. லக்சம்பர்க்
  48. மாலத்தீவு
  49. மால்டா
  50. மொரிஷியஸ்
  51. மால்டோவா
  52. மொனாக்கோ
  53. மாண்டினீக்ரோ
  54. மொராக்கோ
  55. நியூசிலாந்து
  56. நோர்வே
  57. ஓமன்
  58. போலந்து
  59. போர்ச்சுகல்
  60. கத்தார்
  61. அயர்லாந்து குடியரசு
  62. ரஷ்யா
  63. சான் மரினோ
  64. சவூதி அரேபியா
  65. செர்பியா
  66. சீஷெல்ஸ்
  67. சிங்கப்பூர்
  68. ஸ்லோவாக்கியா
  69. ஸ்லோவேனியா
  70. தென் கொரியா
  71. ஸ்பெயின்
  72. ஸ்வீடன்
  73. சுவிட்சர்லாந்து
  74. தைவான், சீனாவின் மாகாணம்
  75. தஜிகிஸ்தான்
  76. தாய்லாந்து
  77. துனிசியா
  78. துர்க்மெனிஸ்தான்
  79. உக்ரைன்
  80. ஐக்கிய இராச்சியம்
  81. அமெரிக்கா
  82. உஸ்பெகிஸ்தான்

கிரீன் லிஸ்ட் குறித்த மேலதிக விபரங்களுக்கு www.visitabudhabi.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

AIRPORT
1 Share
Share via
Copy link