UAE Tamil Web

அக்டோபர் 3 முதல் துபாய் தனியார் பள்ளிகளில் 100% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் முறையில் பாடங்கள் நடைபெற்று வந்தன. ஒருசில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள் ஆன்லைனிலேயே படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் துபாயில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 100% மாணவர்களுடன் செயல்படும் என துபாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. துபாய் அறிவு மற்றும் மனித வள மேம்பாட்டு ஆணையமும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குப் பிறகு நேரடி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பாத மாணவர்கள் கட்டாயம் மருத்துவச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Image

இதேபோல பள்ளிப்பேருந்துகள் 100% மாணவர்களுடன் இயங்கலாம் என்றும் பாடத்திட்டம் சாராத நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முறையாக முகக்கவசம் அணிந்திருப்பதையும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8 Shares
Share via
Copy link