UAE Tamil Web

அபுதாபி: தடுப்பூசி போடவில்லையா..? – அப்படியானால் இங்கெல்லாம் நுழைய அனுமதி இல்லை..!

-Abu-Dhabi-skyline

வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதிமுதல் அபுதாபியில் உள்ள சில பொது இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 93 சதவீதம் என்னும் இலக்கை அடைந்தவுடன் பொது சுகாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கஃபேக்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களுக்குள் இல்லாத அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த முடிவு சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள், தீம் பார்க்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் நர்சரிகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

அதேநேரம் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இடங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷாப்பிங் மால்களுக்குள் அமைந்திருந்த மையங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது தனியாக இயங்கும் வர்த்தக மையங்களுக்குச் செல்லவும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதி பெறாதவர்கள் அதற்கான ஆவணங்களை Alhosn அப்ளிகேசனில் காட்டினால் அவர்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதேபோல 15 வயதிற்குட்பட்டவர்களுக்கும் இதில் விலக்கு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Abu-Dhabi-skyline
0 Shares
Share via
Copy link