UAE Tamil Web

இந்தியா – அமீரகம் விமானப் போக்குவரத்துத் தடை: அமீரகத்திலிருந்து இந்தியா செல்லலாமா? இவர்களுக்கு விதிவிலக்கு..!

airport

கொரோனா பரவல் காரணமாக இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து ஏப்ரல் 25 ஆம் தேதியிலிருந்து 10 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 24) இரவு 11.59 மணிமுதல் இந்தத் தடைக்காலம் துவங்குகிறது.

கடைசி 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடிமக்கள், ராஜாங்க அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் வழக்கம்போல இயங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நமது ஆசிரியர் குழு பரிசோதித்துப் பார்த்ததில், ஏப்ரல் 24 ஆம் தேதிக்குப் பிறகு அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளை துபாய், ஏர் அரேபியா ஆகிய விமான நிறுவனங்களின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வருவோருக்கு 9 நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாகவே அமீரகமும் இந்தத் தடையை அறிவித்துள்ளது.

இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு தொடர்ந்து நமது இணையதளத்தில் இணைந்திருங்கள்.

airport
0 Shares
Share via
Copy link