நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் நிலையாக இருக்கும் நிலையில், கோவிட் -19 பரிசோதனையின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (Seha-சேஹா) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சேஹா, தங்களது அனைத்து பரிசோதனை மையங்களிலும் கோவிட்-19 தொற்று இருப்பதை கண்டறிய நடத்தப்படும் நாசல் ஸ்வாப் PCR டெஸ்டிற்கு, இனி 85 திர்ஹம்ஸ் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
خفضنا سعر فحص مسحة الأنف. السعر الجديد ساري المفعول فوراً في جميع مراكز صحة للفحص.
We have reduced the price of the PCR nose swab test effective immediately across all SEHA testing centers.#SEHA #Healthcare #inAbuDhabi pic.twitter.com/ExkHMFKPwQ
— SEHA – شركة صحة (@SEHAHealth) December 5, 2020
புதிய கட்டண குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சேஹா அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் PCR சோதனையின் விலையை 370 திர்ஹம்ஸிலிருந்து, 250 திர்ஹம்ஸாக குறைத்தது சேஹா. அதே மாதத்தில் PCR பரிசோதனைக்கான கட்டணத்தை துபாய் சுகாதார ஆணையம் 150 திரஹம்ஸாக குறைத்தது,
அபுதாபிக்குள் நுழையும் அனைவரும் கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்வது அவசியம். கடந்த மாதத்தில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகளின் படி, அபுதாபியில் தங்கியிருப்பவர்கள் நுழைந்த நாளிலிருந்து 4 மற்றும் 8-வது நாட்களில் PCR பரிசோதனையும் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.