கொரோனா வைரஸ்: ஹேண்ட் சேணிடைசர் மற்றும் க்ளோவ்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு அமீரக போலீஸ் எச்சரிக்கை..!

flammable
Image Credits- Gulf News

அபுதாபி காவல்துறை கை சுத்திகரிப்பான்(hand sanitisers) மற்றும் கையுறைகள்(gloves) போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சமையலறைகளில் இருந்து விலக்கி வைக்குமாறு குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

அண்மையில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பல குடும்பங்கள் கை சுத்திகரிப்பான் மற்றும் கையுறைகளை அணிந்து வருகின்றன. இதற்காக தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பான்கள் பெரும்பாலானவைகளில் 60 சதவீதம் முதல் அதற்கு மேற்பட்ட அளவில் ஆல்கஹால் கலந்துள்ளது. மக்கள் இதை அறியாமல் சமையலறையில் சமைக்கும் போது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் அருகே நிற்கிறார்கள். இதில் ஆல்கஹால் கலந்துள்ளதால் எளிதில் தீப்பற்றி விடும் ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

இது குறித்து அபுதாபி காவல்துறை அதிகாரி கூறும் போது, “கை சுத்திகரிப்பான் பயன்படுத்திய உடனேயே சமையலறையில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் அருகே செல்ல கூடாது. ஏனெனில் இது உடனடியாக தீப்பற்றும் தன்மை கொண்டது. எனவே கவனமாக இருங்கள்“ என்று கூறினார்.

flame
Image Credits- Gulf News

அபுதாபி காவல்துறையின் அவசர மற்றும் பொது பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவரான கேப்டன் பொறியாளர் அலி ஹசன் அல் மிட்ஃபாய் கூறும் போது, “அதிக அளவு ஆல்கஹால் இருப்பதால் கை சுத்திகரிப்பு மருந்துகள் எரியக்கூடிய திரவமாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானை பெரியவர்களின் மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என்று கூறினார்.

“கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பானை பயன்படுத்துவது பாதுகாப்பானவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இவ்வகை மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆபத்து நேரிடும். மேலும் இவற்றை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் “ என்று கேப்டன் அல் மிட்ஃபாய் கூறினார்.

இதனால் சமையலறைக்குள் நுழைவதற்கு முன், சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ அறிவுறுத்தப்படுகிறது.

Loading...