கொரோனா தொற்று பரவிவரும் இந்த சூழ்நிலையில் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துபாய், அஜ்மான் மற்றும் ஷார்ஜாவை தொடர்ந்து ராஸ் அல் கைமாவிலும் இப்தார் டெண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் குடியிருப்பாளர்கள் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ராஸ் அல் கைமா காவல்துறை வெளியிட்டுள்ளது.
#Notice_RAKpoliceghq pic.twitter.com/JkjwN0hQbp
— شرطة رأس الخيمة (@rakpoliceghq) March 16, 2021
கட்டுப்பாடுகள்:
வீடுகளுக்கு வெளியிலோ, மசூதிக்கு வெளியிலோ, உணவகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ இப்தார் உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் மட்டும் இப்தார் உணவு வினியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உணவு இறுக்கமாக மூடப்பட்ட பாக்ஸ்களிலோ (Box) அல்லது பைகளிலோ இருக்கவேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, 2 மீட்டர் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி கூட்டமாக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் சுகாதாரம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கையுறைகள், முகக் கவசங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.
இந்த மாத தொடக்கத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகியவை புனித மாதத்திற்கான இப்தார் டெண்டுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.