UAE Tamil Web

அதிகரிக்கும் கொரோனா: அமீரகம் – சவூதி இடையே விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்தது சவூதி அரசு..!

Stock-India-airport-Indigo

உருமாறிய கொரோனா பரவலின் காரணமாக அமீரகம், வியட்நாம் மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து சவூதி வரவோ சவூதி உள்துறையிடம் முன்னனுமதி பெறவேண்டும் என சவூதி அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தடைக்காலம் ஜூலை 4 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிமுதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குப் பிறகு மேற்கண்ட நாடுகளில் இருந்து சவூதி செல்லும் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் கட்டாய நிறுவன குவாரண்டைனில் இருக்கவேண்டும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கண்ட நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறி பிற நாடுகளில் 14 நாட்கள் செலவிட்டவர்கள் மற்றும் சவூதியால் தடை விதிக்கப்பட்ட பிற நாடுகளில் இருந்து சவூதி வருபவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சவூதி வருவதற்கும் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap